ஐங்கரன் அறக்கட்டளை

 இவ் உலகத்தை ஆளும் சிவன்,சக்தி விஷ்ணு,லட்சுமி,சரஸ்வதி ஆகிய ஐந்து தெய்வங்களின் வணக்கமே "உ" என்கிற பிள்ளையார் சுளியாகும்.பிள்ளையார் சுழியுடன் எதைத் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.அந்த "உ" வை மையமாக வைத்து தொடங்கப் பட்டதுதான் ஐங்கரன் அறக்கட்டளை. திண்டுக்கல் மாவட்டம் பழநியை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் "ஐங்கரன் அறக்கட்டளை"பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற, ஆன்மீக ஈடுபாடுள்ள அமைப்பாகும். ஐங்கரன் அறக்கட்டளை. "மதத்தை விட உயர்ந்தது மனிதசேவைதான்.பொதுநலனுக்கு அயராது உழைப்பதுதான் கடவுளுக்குச் செய்யும் தொண்டாகும்" என்ற கொள்கையை முத்தாய்ய்ப்பாக கொண்டு பழநியைச் சேர்ந்த சசி கிருஷ்ணசாமி,கேரள மாநிலம் அயித்த மடத்தைச் சேர்ந்த வின்ஸ் தாமஸ் ஆகியோரால் பழநி ஆயக்குடியில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது "ஐங்கரன் அறக்கட்டளை".இதன் நிறுவனர் சசி கிருஷ்ணசாமி. தலைவராக வின்ஸ் தாமஸ் இருந்து வருகிறார்.

இந்தியாவில் வறுமையை ஒழிப்பதுதான் இவர்களது முக்கிய நோக்கமாகும்.

"கொடியது,கொடியது வறுமை கொடியது"அதனினும் கொடியது இளமையில் வறுமை என்கிறார் ஔவையார்.அதற்கேற்ப அந்த கொடுமையான வறுமையை இந்தியாவை விட்டு விரட்டிட நிறுவனர் சசி கிருஷ்ணசாமியும், தலைவர் வின்ஸ் தாமசும் உறுதி பூண்டுள்ளனர்.


ஐங்கரன் அறக்கட்டளை சமூகப்பணி,பார்வையற்றோர், ஏழைக் குழந்தைகளின் கல்வி,மற்றும் ஏழைகளுக்கு இலவச உணவு அளித்து ஏழை விதவைப் பெண்களின் மேம்பாட்டிற்கும் உதவி செய்து வருகிறது. மேலும் ஐங்கரன் அறக்கட்டளை தியானம்,யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொது மக்களிடம் விளக்கி யோகா,தியான மையங்களை ஏற்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.

அமைதியான சூழலில் கண்களை மூடிக் கொண்டு பல சிந்தனைகளிலிருந்து விடுபட்டு மனதை ஒருமைப்படுத்தி கடவுளை மட்டுமே மனதில் நினைத்து 20 நிமிடம் இருப்பதுதான் மெடிட்டேஷன் எனப்படும் "தியானம்" ஆகும்.தினமும் தியானம் செய்வதால் பல நன்மைகள் உடலளவிலும்,மனதளவிலும் ஏற்படுகிறது.தியானம் மன அழுத்தத்தையும், இரத்த அழுத்தத்தையும், நாட்பட்ட வலியையும் குறைக்கிறது.தீய பழக்கங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.நினைவாற்றல்,சுய விழிப்புணர்வு அதிகரிக்கிறது.தினமும் தியானம் செய்தால் உடலும்,மனமும் ஆரோக்கியம் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.தியானத்தின் நன்மைகளை உலகம் முழுவதும் விளக்கி தியானம் செய்ய வேண்டி உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ தியான மையங்களை ஏற்படுத்திட ஐங்கரன் அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.ஏறகனவே அமெரிக்காவிலும், இஙகிலாந்திலும் ஐங்கரன் அறக்கட்டளை சார்பில் தியான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.மேலும் உலகம் முழுவதும் தியான மையங்களை தொடங்க ஐங்கரன் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன் ஏற்பாடு நடந்து வருகிறது.


இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சத்துள்ள உணவு கிடைக்க வேண்டும்.ஆரோக்கியமாக வாழ வேண்டும்.அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வேண்டும் என்பதுதான் ஐங்கரன் அறக்கட்டளையின் விருப்பமாகும்.

 

ஐங்கரன் அறக்கட்டளை தொடங்கப்ட்ட சில நாட்களிலேயே யாரும் எதிர்பாராத வகையில் "கோவிட்-19" என்கிற கொடிய ஆட் கொல்லி நோயான கொரோனா தொற்று இந்தியா முழுவதும் தொற்றிக் கொண்டது.அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது.அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.பணக்காரர்களுக்குப் பிரச்சனை இல்லை.ஆனால் ஏழை,எளியவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது.ஒரு வேளை சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாமல் பலர் தவித்தனர்.யாராவது உதவ மாட்டார்களா.? என ஏங்கினர்.அப்போதுதான் ஐங்கரன் அறக்கட்டளை ஏழைகளுக்கு ஓடோடி வந்து உதவியது.தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வருமானத்திற்கு எந்தவித ஆதாரமும் இன்றி தவித்த 25,000 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உயிர் வாழ ரூ.1500 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி,பருப்பு,எண்ணெய்,சர்க்கரை ஆகிய உணவுப் பொருட்களை இலவசமாக கொடுத்து பசிப்பிணியை ஒழித்தது ஐங்கரன் அறக்கட்டளை. இதை தமிழக மக்கள் மனதார பாராட்டினர்.இதைப்போல் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் வாழ்வாதாரமின்றி தவித்த ஏழை, எளிய மக்களைக்கண்டறிந்து உதவிக்கரம் நீட்டியது.ஐங்கரன் அறக்கட்டளையின் உதவியை அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள். ( தொடரும்

Comments

Popular posts from this blog

Ayngaran Foundation-Organic Farming: A Sustainable and Healthy Way of Agriculture

Ganesh Chaturthi celebrations-Ayngaran Foundation