Posts

Showing posts from February, 2021

Ayngaran slogan

  தோல்வியே வெற்றிக்கான முதல் படி. தோல்வியைக் கண்டு துவண்டுவிட்டால் பிறகு வெற்றி பெறவே முடியாது. வெற்றியைப் பெற தோல்வியை ஏற்றுக்கொள்ளும் அதிலிருந்து பாடம் கற்கும் மனநிலை வேண்டும். அப்படிப்பட்ட மன நிலையைத் தரும், வெற்றிகளைத் தர உதவும் கணபதி மந்திரத்தை இன்று கற்றுக்கொள்வோம். மந்திரம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் விளக்கம்: பூத கணங்களால் தினமும் பூஜிக்கப்படும் யானை முகத்தோனான விநாயகனே, உமையின் மகனே, நாவல் பழம், விளாம்பழத்தின் சாற்றை ருசிப்பவனே, எங்களின் துக்கத்தைத் தீர்ப்பவனே, உன்னுடைய பாதத்தைச் சரண் அடைகிறேன்!